உண்டியல் முறையும் ஹவாலா முறையும், இலங்கையில் சட்டவிரோதமானது
அல்ல என பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் பல பிரேரணைகளை முன்வைக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“ஹவாலா மற்றும் உண்டியல் முறை நம் நாட்டில் சட்டவிரோதமானது அல்ல. ஆனால், அது எந்த வகையிலும் ஒழுங்குபடுத்தப்படவில்லை.
“எனவே, ஜூன் 2024 முதல் மே 2025 வரையிலான 12 மாதங்களுக்குள், ஹவாலா மற்றும் உண்டியல் முறையைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் பணப் பரிவர்த்தனை செய்பவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
“இது தொடர்பில் முழுமையான மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய வங்கியிடம் குழு கோரியுள்ளது. அது ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.