தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) வேலைத்திட்டம் தொடர்பில், பாராளுமன்றத்தில்
இரண்டு நாட்கள் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் இந்த விவாதம் நடைபெறும்.
தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு புரியவைக்கும் வகையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாராளுமன்றத்தில் சற்று முன்னர் தெரிவித்தார்.