மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தை பொலிஸார் மீறுவதாக, அகில இலங்கை
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடரும் பட்சத்தில், அதற்கு எதிராக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அடுத்த வாரம் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்வதற்காக தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தாம் எதிர்நோக்கும் இந்த இக்கட்டான நிலையை போக்குவதற்கு, பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்றினை கோரியுள்ளதாகவும் அதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தலைவர் குறிப்பிட்டார்.