சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் குறித்து, இலங்கை சுகாதார பிரிவினர் கவனம்
செலுத்தி வருவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, எதிர்வரும் நாட்களில் அறிக்கை வெளியிடப்படும் என்று தொற்றுநோயியல் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொவிட்-19 வைரஸ் தொற்றுநோய் ஏற்பட்டு ஐந்து ஆண்டுகளின் பின்னர், சீனாவில் ஒரு புதிய வைரஸ் பரவி வருகிறது.
HMPV எனப்படும் இந்த வைரஸுக்கும் கொவிட் அறிகுறிகள் இருப்பதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிகளால் சில மருத்துவமனைகள் நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, சீனச் சுகாதார பிரிவை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.