வரி செலுத்த வேண்டியவர்கள் முறையாகச் செலுத்தினால் மட்டுமே சமூகத்தின்

பயனாளிகள் குறிப்பிட்ட பணியைச் செய்ய முடியும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல, பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில் அரசாங்கம் மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த காலத்தில் ஒரு நாடாக இந்த வரிப்பணத்தை வசூலிக்க முடியாமல் பாரிய அவலத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறுகிறார்.

கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் திறைசேரி அதல பாதாளத்தில் உள்ளதாகவும், இவ்வாறான நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில் அரசாங்கம் மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவித்தார்.

“​​பிள்ளைகளுக்குத் தேவையான பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்குவதற்கு ஜனாதிபதி தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். இந்த விடயங்கள் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட போது, ஏனைய விடயங்கள் முன்வைக்கப்பட்டு பாராளுமன்றம் முழுமையான குழப்ப நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

“பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் ஒழுக்கத்துடன் செயல்படாவிட்டால், இந்த ஆண்டு குழந்தைகளுக்கு அந்தப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க முடியாது. இவ்வாறான நிலையில், சிறுவர்களுக்கான பாடசாலைச் சீருடைகள் மற்றும் புத்தகங்களை வழங்க அரசாங்கம் முயற்சிக்கும் போது பியகமவைச் சேர்ந்த தனியார் வர்த்தகர் ஒருவர் சமூகத் தேவைகளுக்காக தனது தனிப்பட்ட சொத்துக்களை தியாகம் செய்தமை பாராட்டப்பட வேண்டியதாகும்” என்றார்.

தனது நெருங்கிய தொழிலதிபர் ஒருவர் இந்தியாவில் இருந்து குரங்குப் பிரச்சனைக்கான தீர்வை அறிந்து கொண்டு வந்துள்ளதாகவும், கருத்தடை செய்து சிறிது நாட்களுக்கு உணவு கொடுத்து பராமரித்து குரங்குகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி