கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்களால் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி A-35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கனை பகுதியில் இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
A35 பிரதான வீதியின் புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் காணப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கொழும்பு - புறக்கோட்டை மிதக்கும் சந்தைப் பகுதியில் உள்ள நீர் நிலையில் இருந்து, இன்று வியாழக்கிழமை (02) அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த நீர் நிலையில் சடலமொன்று மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்ட பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.