இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான
டி-20 போட்டியில், இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
Nelsonயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா அதிகபட்சமாக 101 ஓட்டங்களையும், அணியின் தலைவர் சரித் அசலங்க 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் மாட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, ஜகாரி ஃபோல்க்ஸ், மிட்செல் சான்ட்னர் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் தலா 01 விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.
இதன்படி 219 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 03 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க 02 விக்கெட்டுகளையும், நுவன் துஷாரா, மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் தலா 01 விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.
எனினும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 2 - 1 என்ற அடிப்படையில் ஏற்கனவே கைப்பற்றியமை குறிப்பிட்டதக்கது.
இந்த வெற்றியின் மூலம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்தில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
கடைசியாக 2006,ல் நியூசிலாந்தில் டி20யில் வெற்றி பெற்றது. மேலும், நியூசிலாந்தில் இது இரண்டாவது டி20 வெற்றியாகும்.