முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் புகைப்பட ஊடகவியலாளருமான
கணபதிப்பிள்ளை குமணனின் தந்தை செல்லப்பா கனபதிப்பிள்ளை நீண்ட காலமாக சுகவீனமுற்றிருந்த நிலையில் 2025 ஜனவரி முதலாம் திகதியன்று காலமானார்.
முன்னாள் கால்நடை அபிவிருத்தி தொழில்நுட்ப நிபுணரான இவர், ஐந்து மகன்கள் மற்றும் ஒரு மகளின் தந்தை ஆவார். அவரது சடலம், குமுளமுனை - முள்ளியவளையிலுள்ள அவரது வீட்டில், இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கணபதிப்பிள்ளையின் இறுதிக் கிரியைகள், இன்று 2ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு, குமுளமுனை - தாமரைக்கேணி இந்து மயானத்தில் நடைபெறும்.