முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தமிழீழ விடுதலைப் புலிகளின்

தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்போவதாக கூறினார். விடுதலைg; புலிகள் அமைப்புக்கு மஹிந்த ராஜபக்ஷ மீது வைராக்கியம் இருக்கவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெ நிகழ்வொன்றின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“யுத்த காலத்திலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படவில்லை. பயங்கரவாதிகள் எவரும் மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்யவும், குண்டுத் தாக்குதல்களை நடத்தவும் முயற்சிக்கவில்லை. இவர் தனியாக சென்றா யுத்தக் களத்தில் போரிட்டார். நாங்கள் போரிடவில்லையா?

“யுத்தத்துக்கு கட்டளை பிறப்பித்த இராணுவத் தளபதியான எனது பாதுகாப்பு, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் முழுமையாக நீக்கப்பட்டது. அப்போது எமக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கவில்லையா? என்னை வெலிகடை சிறைச்சாலையில் அடைத்த போது, அங்கும் விடுதலை புலிகள் அமைப்பினரும் இருந்தனர்.

“பயங்கரவாதிகளுடன் இருந்த எனக்கு, சிறைச்சாலையில் மேலதிகமாக பாதுகாப்பு வழங்கப்பட்டதா? சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட போது, என்னை படுகொலை செய்வதற்கு தற்கொலை குண்டுதாரியை அழைத்து வந்த மொரிஸ் என்ற பயங்கரவாதி, என் அருகில் அமர்ந்திருந்தார்.

“மஹிந்த ராஜபக்ஷ மீது பயங்கரவாதிகள் ஒருபோதும் தாக்குதல் நடத்தமாட்டார்கள். 2005ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் மஹிந்த ராஜபக்ஷ, 'பிரபாகரனை சந்தித்து பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்' என்று குறிப்பிட்டிருந்தார். யுத்தத்தை அனுமதிக்க போவதில்லை. யுத்தம் தீர்வல்ல என்று மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டது.

“விடுதலை புலிகள் அமைப்புக்கு மஹிந்த ராஜபக்ஷ மீது வைராக்கியம் இருக்கவில்லை. 2005ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு அரசாங்கத்தின் ஊடாக நிதியளிக்கப்பட்டது. ஆகவே, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் விடுதலை புலிகள் அமைப்புக்குமிடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது.

“ட்ரோனர் கருவி ஊடாக மஹிந்த ராஜபக்ஷ மீது தாக்குதல் நடத்துவதற்கு எவருக்கும் பைத்தியம் கிடையாது. ஏனெனில், மிக் விமானத்தைக் காட்டிலும் ட்ரோனர் கருவி ஊடாக தாக்குதலுக்கு அதிக நிதி செலவாகும். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய பிரபுக்கள் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். ஆகவே, அவருக்கு 30 பொலிஸாரை பாதுகாப்புக்காக வழங்குவது போதுமானதாக அமையும்” என, சரத் பொன்சேகா மேலும் குறப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி