இன்று (31) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் விலை
தொடர்பான அறிவிப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, மண்ணெண்ணெயின் புதிய விலை 183 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை.