முல்லைத்தீவு இலங்கை விமானப்படை தளத்தை தடுப்பு நிலையமாக பிரகடனப்படுத்தும்

அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் அனுமதியுடன், இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (30) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று 31ஆம் திகதி முதல், முல்லைத்தீவு விமானப்படைத் தளம் தடுப்பு முகாமாக இயங்கும்.

வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற மியான்மார் அகதிகள் குழுவை ஏற்றிச் சென்ற படகை இலங்கைக் கடற்படையினர் கைப்பற்றியதை தொடர்ந்து, முல்லைத்தீவு விமானப்படைத் தளம் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில், மிரிஹான தடுப்பு முகாமில் இடம் குறைவாக இருந்ததால், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்த அகதிகள், முல்லைத்தீவு விமானப்படைத் தளத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி