ரயில் பயணங்களுக்கான ஆசனங்களை முன்பதிவு செய்யும் போது, பயணிகளின்
தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடுவது கட்டாயம் என, இலங்கை ரயில்வே திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ரயில் நிலையத்திற்குள் நுழையும் போதும் ரயிலுக்குள் நுழையும் போதும் டிக்கெட்டை சரிபார்க்கையில், டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு பாஸ்போர்ட் எண் ஆகியவற்றை சரிபார்த்து உறுதிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாளை (01) முதல் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான டிக்கெட் பணத்தை மீளப்பெறும் போது, பயணிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டின் நகலை ரயில் நிலையத்தில் சமர்ப்பித்து டிக்கெட் வைத்திருப்பவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று, அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.