2024 டிசம்பரில், இலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
2024 டிசம்பர் 1 முதல் 29 வரை, 233,087 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதனால், 2024ஆம் ஆண்டின் டிசெம்பர் மாதம், சுற்றுலாப் பயணிகளின் அதிக வருகை மாதமாகக் கூறப்படுகிறது.
மார்ச் 2024இல் 218,350 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இதுவரை சிறந்த மாதமாக மார்ச் மாதமே பெயரிடப்பட்டிருந்தது.
டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு வந்த அதிகளவான சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவில் இருந்து 414,798 பேரும், ரஷ்யாவிலிருந்து 198,601 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 177,121 பேரும் பதிவாகியுள்ளனர்.
2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 29ஆம் திகதி வரை 2,037,960 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளைப் பெற்ற முதல் ஐந்து நாடுகளாக இந்தியா, ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.
இந்தியா - 414,798
ரஷ்யா - 198,601
ஐக்கிய இராச்சியம் - 177,121
ஜெர்மனி - 134,949
சீனா - 131,289
இந்த எண்ணிக்கை எதிர்பார்த்த இலக்குக்கு சமமாக இல்லை என, சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.