கோறளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை
- வட்ட எனும் வயல் பகுதியில், யானை ஒன்று நேற்று (29) மாலை உயிரிழந்துள்ளது.
இந்த யானையை எழுப்ப முடியாத நிலையில் வயலில் விழுந்து கிடந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு எழுப்ப முடியாமல் விழுந்து கிடந்த யானைக்கு சிகிச்சையளிக்க வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அதிகாரிகள் பார்வையிட்டு சிகிச்சையளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் யானை உயிரிழந்துள்ளது.
-எச்.எம்.எம்.பர்ஸான்