கண்டியில் பிறந்ததாலேயே, தான் பல பிரதேசவாதப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாகத் தெரிவித்த
இலங்கையின் முன்னணி நடிகையான நிரஞ்சனி சண்முகராஜா, தமிழ்ச் சமூகத்துக்குள் காணப்படும் ஜாதியப் பிரச்சினைகளால், தான் பல மன அழுத்தங்களுக்கு உள்ளான போதிலும், அவற்றையை தன்னுடைய வாழ்க்கையின் வெற்றிக்காகப் பயன்படுத்திக்கொண்டதாகக் கூறுகிறார்.
இன்றைய இலங்கை சினிமா, மேடைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் தனக்கென ஒரு அடையாளத்தைத் தக்கவைத்துள்ள நிரஞ்சனி, தனது நடிப்பிற்காக சர்வதேச விருதுகளை வென்றுள்ளதுடன், தேசிய விருதுகள் மூலம் தனது நடிப்பிற்காகவும் அங்கீகரிக்கப்பட்டவராவார்.
இலங்கை வரலாற்றுக் காலந்தொட்டு இன்றுவரை, இலங்கையின் கலைத்துறையை வளர்ப்பதற்காக தமிழறிஞர்கள், கலைஞர்கள், நடிகர்கள், இலக்கியவாதிகள் என்போர், தங்களது வாழ்க்கை, நேரம், முயற்சி மற்றும் அறிவை தியாகம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் எங்கள் மரியாதையையும் அன்பையும் தொடர்ந்து வழங்குகிறோம். அவர்களிடையே, பலரது அன்பையும் மரியாதையையும் பெற்ற கலைஞராக நிரஞ்சனியும் விளங்குகிறார்.
தமிழ்லீடரின் சகோதர ஊடகமான MirrorArts YouTube Channel, அவரை ஒரு விவாதத்திற்கு அழைத்திருந்தது. அதற்கு ஒரு சிறப்புக் காரணமும் இருந்தது. அவள் வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு நாட்டிய நாடகத் துறையில் இணைந்திருப்பதே முக்கிய காரணம். சந்தன விக்ரமசிங்கவினால் நடத்தப்படும் குவேனி நாட்டிய நாடகத்தின் பிரதான கதாபாத்திரமான “குவேனி” வேடத்தில் நிரஞ்சனி நடித்திருக்க, அவருடன் இணைந்து பல கலைஞர்கள் பங்களிப்புச் செய்யவிருக்கின்றனர். இது தனது வாழ்க்கையில் ஒரு சிறப்பு தருணம் என்று, நிரஞ்சனி கூறினார்.
அவருடனான உரையாடல் பின்வருமாறு,
கேள்வி: என்ன இந்த குவேனி?
பதில்: இது ஒரு நாட்டிய நாடகம். தியட்டர் அக்ட். அதை ஒரு வார்த்தைக்குள் மிகைப்படுத்த முடியாது. இதில் நடிப்பு, நடனம் என பல விஷயங்கள் உள்ளன. குவேனி வரலாற்றுக் கதைக்கு, வித்தியாசமான வடிவத்தையும் பரிமாணத்தையும் கொடுத்தவர் சந்தன விக்கிரமசிங்க. வந்து பாருங்கள், புரியும்.
கேள்வி: இலங்கைப் பெண்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: இலங்கைப் பெண்கள் வலிமையானவர்கள். பல இடங்களில் முடிவெடுப்பவர்கள் யார் என்று கேட்டால், அவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். அதற்கு சிறந்த உதாரணம், நம் நாட்டின் மக்கள் தொகையை எடுத்துக் கொண்டால், பெண்களே அதிகம். இலங்கையில் வாக்காளர் வீதத்தை எடுத்துக் கொண்டாலும், பெண்கள்தான் அதிகமாகக் காணப்படுவார்கள். நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் பெண்களுக்கு உள்ள நாட்டில் நாம் வாழ்கிறோம்.
ஆனால் மறுபுறம், பெண்கள் தங்களது பலம் மற்றும் திறன்களை அடையாளம் காணாத ஒரு குழுவாகவும், அவர்களை நான் பார்க்கிறேன். உதாரணமாக, இலங்கையில் ஆடைத் துறையின் வளர்ச்சியில், பெண்கள்தான் அதிகமாக உள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பிலும், அதிகளவில் பெண்கள்தான் உள்ளனர். ஆனால், அந்த விடயத்தில் எனக்கு முரண்பாடு இருக்கிறது. நம் நாட்டில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாக்கப்பட்டால், அந்த பெண்கள் நம் நாட்டில் வலிமையான பெண்களாக இருப்பார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேவைப்படாது.
ஆனால், இந்நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகம். பெருந்தோட்டங்களில் கூட பெண்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், சில காரணங்களுக்காக அல்லது ஏற்றுக்கொள்ள விரும்பாத காரணத்தினால், பெண்கள் குறைவாக மதிப்பிடப்படும் பல சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம்.
உலகின் வலிமையான ஜனாதிபதியை நாம் பெற்றிருந்தோம். அவர்தான், முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க. உலகின் முதல் பெண் பிரதமர் நம் நாட்டில்தான் உருவானார். இப்படிப்பட்ட வரலாற்றுப் பெண்கள் நம் நாட்டில் பிறந்திருக்கிறார்கள்.
அதற்காக, பெண்கள் எப்போதும் கடினமாக இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. பெண்கள் யாருடைய பேச்சையும் கேட்கக்கூடாது என்றும் அர்த்தமில்லை. பெண்கள் வெற்றிகொள்ள வேண்டிய முதல் விஷயம் பெண்மை என்று நம்புகிறேன். அந்தப் பாக்கியம் பெண்களுக்குத்தான் இருக்கிறது. அதுதான் பெண்மை. அதைக் காத்துக்கொண்டு, தங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதம் அல்லது திறனைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். நம் நாட்டில் உள்ள பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதைத்தான்.
பெண்களின் வலிமை பற்றிய கருத்துக்களை மிகத் தெளிவாக வெளிப்படுத்தினார் நிரஞ்சனி. அவர் ஒரு பெண்ணாக, மிகவும் திடமான மனதுடன் இருந்தார். தற்போது சமூக ஆர்வலராக சில பணிகளைச் செய்து வருகிறார்.
அவருடனான முழுச் செவ்வியை, சிங்கள மொழியில் கீழே உள்ள வீடியோவில் காணலாம்.