ஜெனரல் சவேந்திர சில்வா, 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின்

பிரதானி மற்றும் இலங்கை இராணுவ செயற்பாட்டு சேவையில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

4 தசாப்தங்களாக இலங்கையின் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, 2020 ஜனவரி 1ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக சேவையாற்றினார்.

இவர் இலங்கை இராணுவத்தில் தியத்தலாவவிலுள்ள இலங்கை இராணுவ பீடத்தில் 19ஆவது அதிகாரி கெடெட் ஆட்சேர்ப்பு பாடநெறியில் 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி சேர்ந்தார்.

சவேந்திர சில்வா வடக்கு, கிழக்கை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையில் விசேடமாக செயற்பட்டிருந்தார்.

அந்த மனிதாபிமான நடவடிக்கையில் 58வது படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டார்.

பின்னர் 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி இராணுவத் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மே 31, 2022 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார்.

அதன் பிறகு, அவர் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாகி நான்கு ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றினார்.

அதாவது முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் கீழ் அவர் செயற்பட்டிருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி