இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவராக தொடர்ந்தும் மாவை

சேனாதிராஜா செயற்படுவார் எனவும், கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் எனவும் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (28) இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் இராஜிநாமா சம்பந்தமாக வாக்கெடுப்பு நடத்துவது என்று போடப்பட்டிருந்தது.

“இது சம்பந்தமாக பல வாதப்பிரதிவாதங்கள் இருந்த போதிலும் 18 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஓர் ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது.

“அதில் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் நன்மை கருதி தனது பெயருக்குக் களங்கம் ஏற்படாத வகையில் தன்னுடைய இராஜிநாமாவை உறுப்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. மேலும் சிலரும் அந்தக்  கருத்துக்களை ஏற்றிருந்தார்கள். அதற்கு எதிரான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

“இறுதியில் கட்சியின் மத்திய குழு ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளது. மாவை சேனாதிராஜா தொடர்ந்தும் கட்சியின் அரசியல் குழுத் தலைவராகச் செயற்படுவார். தலைவர் பதவி எஞ்சிய காலத்துக்குப் பதில் தலைவராக கட்சியின் சிரேஷ்ட உப தலைவராகச் செயற்படும் சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார்.

“பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரிவினை இல்லாது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் குழு என்பது குழுவாக எடுக்கப்படும் தீர்மானங்களை மையப்படுத்தி, மத்திய செயற்குழு சந்திக்க முடியாத தருணங்களில் அரசியல் குழு கூடுவது வழக்கமாக இருக்கின்றது.  பல முக்கிய விடயங்களை அரசியல் குழுவே எடுத்திருக்கின்றது.

“எனவே, முன்னைய காலத்தில் மாவை சேனாதிராஜா கட்சித் தலைமை பொறுப்பை எடுத்தபோது சம்பந்தனை அரசியல் குழுவின் தலைவராக நியமித்திருந்தோம். அதனடிப்படையிலே தான் இப்போது மாவை சேனாதிராஜா அந்த பதவியை வகிப்பார் என்ற தீர்மானம் எடுத்துள்ளோம்.

இதேவேளை, கட்சி தொடர்பாக யாழ்ப்பாணத்தில் தொடரப்பட்ட வழக்கில் இதுவரை கட்டளைகள் ஏதும் வழங்கப்படவில்லை. எனவே, அது குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை"  என்றார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி