இந்த வருடம் நாட்டுக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்துள்ளதாக,

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை கலாசார ரீதியாக வரவேற்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டின் 2 மில்லியனைப் பூர்த்தி செய்யும் சுற்றுலாப் பயணி, இன்று (26) காலை 10.49 மணியளவில், பாங்காக்கில் இருந்து UL 403 விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் புத்திக ஹேவாவசம், சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் கலாநிதி ருவன் ரணசிங்க, அந்த சுற்றுலாப் பயணியை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், விமான நிலையத்தின் Silk Route Loungeஇல், சுற்றுலா பயணிகளை வரவேற்கும் சிறப்பு விழாவையும் ஏற்பாடு செய்திருந்தது.

ஆண்டுக்கு 20 இலட்சத்தைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை இது நான்காவது முறையாகும். இதற்கு முன்பு, 2016, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் மட்டும் 20 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

2018க்குப் பிறகு, இந்த ஆண்டு, ஒரே ஆண்டில் அதிக சுற்றுலாப் பயணிகளைப் பதிவு செய்துள்ளது. டிசம்பர் முதல் 26 நாட்களில் மாத்திரம், 1,95,127 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். மேலும், டிசம்பர் 31 நள்ளிரவுக்குள் 250,000 சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பெப்ரவரி 2019இல் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 250,000 ஐ தாண்டியது.

ஈஸ்டர் தாக்குதல், கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்நாட்டின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் ஒன்லைன் விசா பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதைத் தவிர, பயணச் சேவை வழங்குநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க, தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கடந்த 3 மாதங்களில் மட்டும் 515,192 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். புதிய அரசாங்கம் 39 நாடுகளுக்கு இலவச விசா வசதிகளை வழங்கவும் ஏற்பாடு செய்தது. 2025ஆம் ஆண்டு 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டிற்குக் கொண்டுவரும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் டிசம்பர் 22ஆம் திகதி வரை, 1,972,000 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர். அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள், இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மன் மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து அதிகளவில் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி