70 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவருக்கு விஷ ஊசி ஏற்றி கொலை செய்த சம்பவம் தொடர்பில்,

திக்வெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணித் தகராறு தொடர்பான நீதிமன்ற வழக்கு இடம்பெறும் பின்னணியில், இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

திக்வெல்ல - வத்தேகம தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 70 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவருக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறி, மாத்தறை - பதிகம வைத்தியசாலையில் டிசம்பர் 20ஆம் திகதி பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர், மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு 4 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (24) மாலை உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்குள் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், அப்பெண்ணுக்கு விஷ ஊசியை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றதாக, அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ​​குறித்த வீட்டிற்கு அருகில் இருந்த சிசிடிவி கெமராவில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டன. அதன்படி, சம்பந்தப்பட்ட பெண்ணைச் சந்திப்பதற்காக ஒருவர் வீட்டிற்குள் நுழைவது, அந்தக் கெமராவில் பதிவாகியுள்ளது.

சில நிமிடங்களுக்குப் பிறகு, அடையாளம் தெரியாத நபரும் சம்பந்தப்பட்ட பெண்ணும் பீதியுடன் வீட்டை விட்டு வெளியே வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகளில், பெண்ணின் கழுத்தைப் பிடித்து, வீதியை கடந்து அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு ஓடுவதும், விஷ ஊசியை ஏற்றியதாக சந்தேகிக்கப்படும் நபர், மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதும் தெரிகிறது.

சம்பவம் தொடர்பில் வினவியபோது, ​​குறித்த பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தியதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டு, நேற்றைய தினம் (25) மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் இரத்த மாதிரிகள் சட்ட வைத்திய அறிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி