இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பிரவுன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த
கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பிரவுன்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிஎல்சி நிறுவனம், தன்சானியாவை தளமாகக் கொண்ட Lipton Teas and Infusions நிறுவனத்தில் 100% பங்குகளை வாங்கியுள்ளதாகக் கூறுகிறது.
இந்த பரிவர்த்தனை கடந்த டிசம்பர் 20ஆம் திகதி நடந்துள்ளது. இருப்பினும், பரிவர்த்தனையின் மொத்த மதிப்பை Browns Investment PLC வெளியிடவில்லை.
பிரவுன்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிஎல்சி மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பதிவு செய்யப்பட்ட முழுச் சொந்த நிர்வாகத்திலான நிறுவனமான B Commodities ME FZE மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.
இவ்வாறு, பிரவுன்ஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பி.எல்.சி நிறுவனத்தால், கென்யா, தன்சானியா மற்றும் ருவண்டாவில் லிப்டன் டீஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான நிறுவனங்களை கையகப்படுத்தியது தொடர்பில், மே 7ஆம் திகதியன்று முதன் முதலில் வெளியிட்டது.
இந்த கையகப்படுத்துதலின் மூலம், பிரவுன்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிஎல்சி, உலகின் மிகப் பெரிய தேயிலை உற்பத்தியாளராக மாறும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.