ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் வசந்தா
ஹந்தபாங்கொட அம்மையார் காலமானார்.
திடீர் சுகவீனமுற்ற நிலையில் அவர் உயிரழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில், இங்கிலாந்தில் உள்ள தனது மகளைப் பார்க்கச் சென்றிருந்த அவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஆசிரியராக பணியாற்றிய வசந்தா ஹந்தபாங்கொட, கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதியன்று, காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் சமூகத்தில் இவரைப் பற்றி அதிகம் பேசப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலுக்கு மிகவும் விசுவாசமாகப் பேசப்பட்ட பெண்ணாவார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆட்சிக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்த அவர், கோல்ஃபேஸ் போராட்டம் மீதான தாக்குதல் வழக்கில் பிரதிவாதி ஆனார். இதன் காரணமாக அவர் உட்பட மேலும் 06 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் அவர், கடுமையான அரசியல் தோல்விகளுக்கு முகங்கொடுக்கும் போதும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளராக தீவிர பங்களிப்பை ஆற்றினார்.