கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் அற்புத நத்தார், நேற்று (24) நள்ளிரவு பிறந்தது. இருப்பினும்,
இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லஹேம் நகரில், இந்த ஆண்டு நத்தார் கொண்டாட்டம் இருக்காது.
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டாட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பெத்லஹேம் மேயர் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, டாட்டல் சீசனில் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான பெத்லஹேம் நகரம் தனிமைப்படுத்தப்பட்டது.
வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில், புனித திருத்தந்தை பிரான்சிஸ் பங்கேற்கும் முக்கிய ஆராதனை நடைபெறும்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான கிறிஸ்தவ தேவாலயங்களில், நேற்று நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றது.
ஜாஎல விக்ஷோபா தேவமாதா தேவாலயத்தில் நடைபெற்ற முக்கிய ஆராதனைக்கு, பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில், அருட்தந்தை ஷாமிந்த ரொஷானும் கலந்துகொண்டார்.