கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் குழுவிலிருந்து இலங்கை வெளியேறினாலும்,

மீண்டும் சர்வதேச நிதிச் சந்தையில் செயலாக்க உறுப்பினராக மாற இன்னும் வாய்ப்புகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு, இணங்கிய பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்வதும், கடன் மதிப்பீட்டை BBBக்கு உயர்த்துவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இலங்கையின் தற்போதைய நிலைமையை விளக்கி இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

Fitch Ratings இலங்கையின் கடன் மதிப்பீட்டை உயர்த்திய சில நாட்களுக்குள், உலகின் முன்னணி கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான MOODYS, இலங்கையில் நீண்ட கால அந்நியச் செலாவணிக் கடன்களை வழங்குவது தொடர்பான மதிப்பீடுகளையும் உயர்த்தியது.

MOODY's கடன் மதிப்பீட்டு நிறுவனம் இலங்கையின் நீண்டகால அந்நியச் செலாவணி கடன் வழங்கல் மதிப்பீட்டை Ca இலிருந்து Caa 1 வரை உயர்த்தியுள்ளது.

இந்நிலையிலேயே, இலங்கையின் உண்மையான நிலமை தொடர்பில், ஹர்ஷ எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி