ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள்
அமைச்சர்களுக்கு எதிராக “பொது பணத்தை பாதுகாக்கும் சட்டத்தரணிகள்” அமைப்பு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தவறான தகவல்களை சமர்ப்பித்து ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்றிருக்க வேண்டும் என சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள், பணம் கோரும் நபரின் மொத்த மாதாந்த வருமானம் குறைவாக இருந்தால் மட்டுமே ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் விடுவிக்கப்பட வேண்டும் என்றனர்.
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்கள் அந்த பணத்தை பெறுவதற்கான தகுதிகளை உண்மையில் பூர்த்தி செய்தார்களா என்ற பிரச்சினை எழுந்துள்ளது.
குறிப்பாக, நீதிமன்றம் பணக் கணக்கை முடக்கி வைக்குமாறு சமீபத்தில் உத்தரவிட்டதையடுத்து, பொருத்தமான நிபந்தனைகளை கருத்திற்கொண்டு இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, முன்னாள் அமைச்சரும் செல்வந்தருமான கெஹலிய ரம்புக்வெல்ல ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நூறு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளார்.
ஜனாதிபதி நிதி என்பது பொதுப் பணம் என்பதால், பொய்யான தகவல்களை அளித்து அந்தப் பணத்தை அபகரிப்பது பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.