2021இல், கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீயில் எரிந்து நாசமான 'Express-Pearl (MV-X PRESS PEARL)

என்ற கப்பலில் இருந்து சிதறிய பிளாஸ்டிக் முத்துக்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளுக்காக, கடந்த வருட இறுதிக்குள் 802,016,487 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சமூக பங்களிப்புடன் மேற்படி பிளாஸ்டிக் முத்துக்களைச் சேகரிப்பதற்கு 248,192,250 ரூபாய் கொடுப்பனவாகவும் அதற்கான  உபகரணங்கள், போக்குவரத்து, உணவு மற்றும் இதர செலவுகளுக்காக 553,824,237 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.

கடற்கரையில் பிளாஸ்டிக் முத்துக்கள் மேலும் சிதறிக் கிடப்பதால், கணிசமான எண்ணிக்கையில் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். 2021 உடன் ஒப்பிடும்போது, 2022இல் கடற்கரையை சுத்தம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு செலவுகளைக் குறைக்கவில்லை என்று, கடல்சார் பாதுகாப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி