நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக அழிவடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்க,
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அந்த வகையில், சேதங்களுக்குள்ளான 6 வகையான பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அடிப்படையில் இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரிசி, சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம் மற்றும் சோயாபீன்ஸ் ஆகிய பயிர்களுக்கு இவ்வாறு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த டிசம்பர் 02ஆம் திகதி வரையில் நீடித்த சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட பயிர் சேதங்கள் தொடர்பில் விவசாய, காணி, கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.