2022 முதல் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையான தனது ஆட்சிக் காலத்தில் பொதுப் பிரதிநிதிகளின்

மருத்துவ உதவிக்கான தனிப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதி நிதியத்தின் நிலையான நிர்வாக நடைமுறைகளின் கீழ் வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர்களில் ஒருவரை தவிர, எவரும் 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி உதவியைப் பெறவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும், குறித்த அறிக்கையில் தமது பதவிக் காலகட்டத்தில் செய்யப்பட்ட பல குறிப்பிடத்தக்க கொடுப்பனவுகளையும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவபிரிய பெரேராவின் இருதய அறுவை சிகிச்சைக்கு 1 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கொங்கஹகேவின் இருதய அறுவை சிகிச்சைக்கு 500,000 ரூபாய்கள் வழங்கப்பட்டன அதேநேரம் கேட்கும் கருவிகளை பெறுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சி. முத்துக்குமாரானாவுக்கு 400,000 ரூபாய்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஏ. ஜகத் குமாரவுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு 1 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டதுடன், மூத்த நடிகை மாலினி பொன்சேகாவுக்கு சத்திரசிகிச்சைக்காக 5 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், மருத்துவ சிகிச்சைகளுக்காக ஜனாதிபதி நிதியம் 100 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான நிதி உதவியை வழங்கியுள்ளது.

இதில் நோயாளிகள், விண்ணப்பதாரர்கள் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் சிறுவர்களுக்கான உதவிகளும் அடங்கியிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி