அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இம்மாதம் 31ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ள வைத்தியர்களும் அதில் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
அரசு பதிவு செய்யப்பட்ட மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயதை 63 வயது வரை நீட்டிக்க, அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மற்றும் அரச நிர்வாகம், மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் ஆகியோரினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இது அமைந்துள்ளது.
அதன்படி, விசேட மருத்துவ அலுவலர்கள், தர மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல் மருத்துவ அலுவலர்கள், அனைத்து பல் அறுவை சிகிச்சை அலுவலர்கள் மற்றும் நிர்வாக மருத்துவ அலுவலர்கள் உட்பட அனைத்து அரசு பதிவு மருத்துவ அலுவலர்களின் ஓய்வு வயது, 63ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவர்களின் ஓய்வு வயது 65ஆக இருந்தது. பின்னர் அது 60ஆக குறைக்கப்பட்டது. இதனால், இப்பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.