இலண்டனில் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரால் வழிநடத்தப்பட்டதாகக் கூறப்படும் பாதாள
உலகக் கோஷ்டியினர் குழுவொன்று, வர்த்தகர்களை பயமுறுத்தி ஐந்து கொள்கலன் சீனி டெண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்த மோசடி ஒன்று பதிவாகியுள்ளது.
சுங்கப் பொறுப்பில் இருந்த ஒரு இலட்சத்து 35 ஆயிரம் கிலோகிராம் சிகப்பு சீனி அடங்கிய ஐந்து கொள்கலன்கள், இவ்வாறு டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.