எம்பிக்களின் கல்வித் தகுதி குறித்த கேள்வி வந்து வந்துப் போகிறது. இதற்கிடையில், சமீபத்தில்
சஜித் தனது கல்வித் தகுதி குறித்து, பாராளுமன்றத்தில் வைத்து நாட்டுக்குத் தெரிவித்தார். அப்படியானால், அந்தத் தகுதிகள் ஏன் தாக்கல் செய்யப்படவில்லை என்று அரசு கேள்வி எழுப்புகிறது. செய்வேன் என்கிறார் சஜித். கல்வித் தகைமைகள் தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை, நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஹன்சார்ட் துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேவேளை, உவிந்து இவ்வாறு கூறியுள்ளார். “அடுத்த பாரளுமன்றக் கூட்டம், அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் திகதி நடக்கும். அதனால்தான், சான்றிதழ்களை நேற்று தாக்கல் செய்யாமல் இன்று கொண்டு வந்தார். நேற்று சமர்பித்தால், இன்று சேம்பரில் உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவார்கள். இப்போது நண்டு வேகும்வரை காத்திருங்கள். முட்டாள் ஊடகங்களும் இதைத் துவைத்துக்கொண்டிருக்கின்றன. நன்றாகக் கழுவி ஊற்றட்டும். சான்றிதழ்கள் குறித்து பொய் கூறியதற்காக சஜித்தும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இது எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால் சொல்கிறேன். நான் ஒக்டோபர் 2013 இல் சஜித்தை நேர்காணல் செய்து, இந்த கல்வித் தகுதியைப் பற்றி எழுதியுள்ளேன். இன்று வரை நான் எழுதியது பொய் என்று சஜித் கூறியிருக்கிறாரா?
அதுமட்டுமின்றி, இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் என்னிடம் உதவி கேட்டு செய்தி அனுப்பியுள்ளனர். என்னிடம் அவை உள்ளன. இதன் பொய்யை நான் காட்டுவேன். நான் மட்டுமல்ல, ரணில் விக்கிரமசிங்க, ஹர்ஷ டீ சில்வா அனைவருக்கும் இந்த மனிதனின் பொய்கள் பற்றித் தெரியும். நான் இதுவரை யாரையும் அவதூறாகப் பேசியதில்லை” என்று, உவிந்து குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், ஐமசவின் இளைஞர் குழுவை சஜித் நேற்று சந்தித்து பேசினார். பிரசாத் சிறிவர்தன, மகேஷ் சேனாநாயக்க, ஷரித் அபேசிங்க போன்றவர்கள் வேலைக்கு வந்துள்ளனர். “புதிய ஐமசவை விரைவில் பார்க்கலாம்’ என்கிறார் மகேஷ். “புதிய தலைவர் வருவாரா” என்று கேட்க, 'ஏன் டில்வின் சில்வாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை' என்று மகேஷ் கேட்கிறார். “ஒரு மன உறுதி கொண்ட அணி எப்போதும் உருவாகும்” என்றும் மகேஷ் கூறுகிறார். இதேவேளை, சஜித் சகல கல்வித் தகைமைகளையும் முன்வைத்ததாக ஐமச பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்துள்ளார். “பேராசிரியர்களும் கலாநிதிகளும் தங்களிடம்தான் இருக்கிறார்கள் என்று கூறி, திசைக்காட்டிதான் பிரச்சாரம் செய்தது. அப்போது, சஜித்தின் தேர்வுகளை குழு தேடிக்கொண்டிருந்தது. அதனால்தான் சஜித்தின் தேர்வுகளை நாடே அறிந்தது. திசைகாட்டியால்தான் இது சாத்தியமானது. எனவே திசைகாட்டிக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.