ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே விழுந்ததில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

வான் பாதுகாப்பு அமைப்புகளால் ஏவுகணையை இடைமறிக்க முடியாமற் போனதால் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 77 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் அறிவித்ததையடுத்து, வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 25 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

காசாவின் குழந்தைகள் குளிர், நோய் மற்றும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாக யுனிசெஃப் எச்சரித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள 96 சதவீத பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் நிலையில் இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 107,512 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி