மீன் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக, பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
கடல் பகுதிகளில் நிலவும் மோசமான வானிலையே இதற்குக் காரணம் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, லின்னோ ஒரு கிலோகிராம் 2,200 ரூபாவிற்கும் ஒரு கிலோ தலப்பத் 2200 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக, பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாரச்சி தெரிவித்தார்.
தோரா மீன் ஒரு கிலோகிராம் இன்று 2,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.