எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமைகள் தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சகல கல்வித் தகைமைகளையும் நேற்றைய (18) தினம் பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
இதன் பிரகாரம், இன்று (19) முற்பகல் 11.40 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணப் பத்திரங்களை பாராளுமன்ற ஹன்சாட் பிரிவிடம. ஒப்படைத்தார்.