இஸ்லாத்தை நிந்தித்ததாக
குற்றம் சாட்டி தொடரப்பட்டுள்ள வழக்கொன்றில் பெயர் குறிப்பிடபட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பிடியாணை பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று அவர் ஆஜராகத நிலையில் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
கலகோட அத்தே ஞானசார தேரர் சுகயீனம் காரணமாக இன்றைய வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை என அவர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.
எவ்வறாயினும் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.