ஶ்ரீலங்கா பொதுஜன

பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் இல்லாதபோது தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இன்று (18)  பதிலளித்துள்ளார்.

இறுதியாண்டு சட்டக்கல்லூரி பரீட்சையை எதிர்கொண்ட விதத்தில் பிரச்சினை இருந்தால் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் எம்.பி.ராஜபக்க்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

பிறிதொரு நாட்டில் அரசியல் தஞ்சம் பெறுவுள்ள நபர் ஒருவர் தம்மீது சுமத்தியுள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்த வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, வெளிநாடு ஒன்றில் இருந்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் சம்பந்தப்பட்ட நபர் விரைவில் இலங்கைக்கு வந்து சாட்சியமளிப்பார் எனத் தெரிவித்தார்.

மீண்டும் பேசிய நாமல் ராஜபக்‌ஷ எம்.பி, தான்  குளிரூட்டி அறையிலிருந்து பரீட்சை எழுதியதனை நிரூபித்தால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாகவும், நிரூபிக்க முடியாவிட்டால் உரிய குற்றச்சாட்டை முன்வைத்த அமைச்சர் வசந்த சமரசிங்க பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி