ஹோமாகம பனாகொட
பெலதாகொட ரணவிருகம பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வியாபாரிக்கு சொந்தமானது என கூறப்படும் வீடொன்றின் மீதே இன்று (18) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
வெளிநாட்டில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வழிகாட்டலிலே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.