யாழ்ப்பாண நகரத்தில்
காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்கு (154-160) உயர்ந்துள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்து தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் பாதகமான காரணிகள் இருப்பின் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், பரிசோதனைகளின் போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீங்கு விளைவிக்கக் கூடியளவில் காற்றின் தரம் காணப்படுமாயின் அது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் பொறிமுறையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த வைத்தியர் உமாசுகி நடராஜா என்பவரால் காற்றின் தரம் தொடர்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது