தனது சட்டப் பட்டத்தின் செல்லுபடியாகும்

தன்மை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ பதிலளித்துள்ளார்.

என்மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று விவரித்தார்.
 
அரசியல் ஆதாயத்துக்காக பல ஆண்டுகளாக என் மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுகளைப் போலவே, இந்தக் குற்சாட்டும் முற்றிலும் ஆதாரமற்றது. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமன்றி இலங்கை சட்டக்கல்லூரியின் நம்பகத்தன்மையையும் குறைமதிப்புக்கு உட்படுத்தும், இது நியாயமான மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்ற நிறுவனமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
 
எனது சட்டப் பரீட்சைகளின்போது எனக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்பதை இந்த விசாரணை நிரூபிக்கும் என்று நான் நம்புகிறேன்.
 
விசாரணைக்கு எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன், உண்மை வெல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.
 
தற்போதைய அரசாங்கத்தின் குறைபாடுகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப சில தரப்பினர் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை பயன்படுத்துவதாக  அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி