யாழ்.போதனா வைத்தியசாலைக்கு
நோயாளர் என்ற காரணத்துக்காக அன்றி வேறு எக்காரணம் கொண்டும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டாது என யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உறுப்பினருக்கு எதிராக யாழ்.நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகியிருந்த உறுப்பினர் இராமநாதன் அருச்சுனவுக்கு நேற்று (16) ஒரு இலட்சம் ரூபா பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் வழக்கு அடுத்த வருடம் (2025) பெப்ரவரி 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசிக்க முடியாது எனவும், அவர் உள்ளே செலவதாயின் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் எனவும் யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் அனுமதியின்றி பிரவேசித்தால் தாக்கவோ துன்புறுத்தவோ மாட்டோம் என யாழ்.போதனா வைத்தியசாலை தெரிவித்ததோடு அவரை யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைப்போமெனவும் வைத்தியசாலை தரப்பில் உறுதி வழங்கப்பட்டது.