எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர்

குமார ஜயக்கொடி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் நேற்று (16) பிற்பகல் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

அமைச்சருக்கு பட்டம் இல்லை என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தியை விசாரிக்க கோரிக்கை.

முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எரிசக்தி அமைச்சர், பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, பொறியியலாளர் என்ற வகையில் அனைத்து தகுதிகளையும்  தான் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி, தனக்கு பட்டம் இல்லை என சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகள் பொய்யானதும் போலியானதும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வித் தகுதி தொடர்பில் போலியான செய்திகளை பரப்புபவர்கள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் மீது விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதற்காக வழங்கப்பட்ட சான்றிதழையும் அமைச்சர் குமார ஜயக்கொடி ஊடகங்களுக்கு வழங்கினார்.

நேற்று (16) காலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவும் இந்த கல்வித் தகுதிப் பிரச்சினை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

அதாவது நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தம்முடைய தகவல்களைப் பொய்யாகப் பகிர்ந்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோருவது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி