'ஜனாதிபதி அன்பளிப்பு' எனும்

பெயரிleaderx2021ல் பரவி வரும் போலிச் செய்தி ஒன்று குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கத்தை அளித்துள்ளது.

இது குறித்த அரசாங்க தகவல் திணைக்களம்  விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
 
"ஜனாதிபதி அன்பளிப்பு" எனும் பெயரிலான தலைப்பில் அரசாங்கத்தின் உதவி வேலைத்திட்டம் தொடர்பில் போலி செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக பரவிவருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
 
மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு எனக் குறிப்பிட்டு குறித்த செய்தியுடன் போலி இணைப்பு (Link) ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
download 3
 
குறித்த செய்தி முற்றிலும் பொய்யென்பதுடன் அரசாங்கம் இவ்வாறான வேலைத்திட்டம் தொடர்பில் தீர்மானம் எடுத்திருந்தால், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாட்டில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு குறித்த முடிவுகளை அரசாங்கம் தெரிவிப்பது செயன்முறையாக உள்ளது.
 
அவ்வாறான ஏற்றுக் கொள்ளக் கூடிய முறைமையின் ஊடாக அரசாங்கத்தினால் அறிவித்தல் செய்யப்படாத அரச கொள்கை மற்றும் முடிவுகள் தொடர்பில் இவ்வாறான பொய்யான செய்திகளை பிரசாரம் செய்வதிலிருந்து தவிர்த்து கொள்ளுமாறு சமூக செயற்பாட்டாளர்களிடம் தயவாய் வேண்டிக்கொள்வதுடன், அடிப்படையின்றி பொய்யான செய்திகளை ஏற்றுக் கொள்தல் மற்றும் பரிமாறிக் கொள்வதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு மக்களுக்கும் அறியத் தருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி