நாடாளுமன்றத்தின் புதிய
சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிய. வருகிறது.
ஜகத் விக்ரமரத்ன கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவானார். தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட விருப்புப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்ற விக்கிரமரத்ன 51,391 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மருத்துவ நிருவாகியாகவும் பணியாற்றிய விக்ரமரத்ன, பொலன்னறுவை கல் அமுனா மகா வித்தியாலயம் மற்றும் கண்டி தர்மராஜா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல ராஜினாமா செய்ததையடுத்து, சபாநாயகர் பதவி காலியாக உள்ளது. புதிய சபாநாயகர் நியமனம் நாளை (17) நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இலங்கையின் 23வது சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி எம்.பி ஒருவரின் பெயரை முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.