தொடர்ந்து பெய்து வரும்
கடும் மழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களுக்கு இன்று (15) மாலை 4.00 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பதுளை, கண்டி, குருணாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களின் பல இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பதுளை பிரதான புவியியலாளர் திருமதி ஹர்ஷனி பெரேரா தெரிவித்தார்.
மலைச்சரிவுகளை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.