சபாநாயகர் பதவிக்காக
எதிர்க்கட்சியும் பெயரை முன்மொழியவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்தப் பெயர் முன்மொழியப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டார்.
"ஜனதா விமுக்தி பெரமுன ஒரு பொறுப்பான கட்சியாக செயற்பட வேண்டும், வெளிப்படையாக, சபாநாயகர் தனது பதவியை இராஜினாமா செய்தால் மட்டும் போதாது. அவரும் தனது எம்பி பதவியிலிருந்து விலக வேண்டும்.
அடுத்த சபாநாயகரின் தகுதிகள் அல்லது நம்பிக்கை குறித்து எங்களுக்குத் தெரியாததால், அன்றைய தினம் ஒரு சபாநாயகரையும் நாங்கள் முன்மொழிகிறோம் என்றார்.