சபாநாயகர் பதவிக்கு மூவரின்
பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, பாராளுமன்ற உறுப்பினர் லக்க்ஷ்மன் நிபுணராச்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பதி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அசோக ரங்வலவின் கல்வித் தகுதி தொடர்பாக நாட்டில் கடும் விவாதம் எழுந்துள்ள நிலையில்,அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவதாக நேற்று (13) பிற்பகல் அறிவித்தார்.
பாராளுமன்றம் அடுத்த வாரம் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் கூடவுள்ளதுடன், அரசியலமைப்பின் பிரகாரம் அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமிக்கப்படவுள்ளார்.