சபாநாயகர் அசோக ரங்வலவின்
இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துள்ளார்.
சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகைமை தொடர்பில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக நேற்று (13) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது கல்வித் தகைமை தொடர்பில் சமூகத்தில் பிரச்சினை எழுந்துள்ள போதிலும், சபாநாயகர் என்ற வகையில் தனது கல்வித் தகுதி தொடர்பில் பொய்யான கருத்துக்களை வெளியிடவில்லை என அசோக ரன்வல ஊடகங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 21 ஆம் திகதி சபாநாயகராக பதவியேற்ற அவர் நேற்று பதவி விலக முடிவு செய்யும் போது 22 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்துள்ளார்.
இதன்படி, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகக்குறைந்த காலம் சபாநாயகராக கடமையாற்றிய சபாநாயகராக அசோக ரன்வல வரலாற்றில் இடம்பிடிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. .