இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி
திரௌபதி முர்முதீவின் அழைப்பின்பேரில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாளை15 முதல் 17 வரையில் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம்இதுவாகும்.
இந்தவிஜயத்தின்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி. திரௌபதி முர்முதுவைச் சந்திப்பதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஏனைய இந்திய உயரதிகாரிகளுடன் இருநாடுகளினதும், பரஸ்பர நலன்கள் குறித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் முன்னேற்றும் மற்றும் பலப்படுத்துவதாக அமையும்.