தான் பெற்ற பட்டச் சான்றிதழ்களை
திட்டமிட்டபடி சமர்ப்பிக்க முடியாத நிலையில் தனது பதவியை இராஜினாமா செய்வதாக சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக மிகவும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகரின் பட்டமும் கலாநிதிப் பட்டமும் போலியானவை என்ற கூற்றுக்கள் சமூக ஊடகங்களில் ஆரம்பத்தில் வதந்தியாகப் பரப்பப்பட்ட நிலையில் தற்போது எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் இந்த விடயத்தில் உண்மையை அம்பலப்படுத்துமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகத்தை பயன்படுத்தி வரும் நிலையிலேயே ஜனாதிபதிக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளார்