(பாறுக் ஷிஹான்)

தமது அடிப்படை வசதிகளை

விரைவாக ஏற்படுத்தித் தருமாறு கோரியும்  இடநெருக்கடிக்கு தீர்வு காணுமாறும்  வலியுறுத்தியும் அம்பாறை மாவட்டம்  ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  தீப்பந்தம் ஏந்தியவாறு  தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் நேற்று (12)  இரவு 7.30 மணியளவில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

IMG 20241213 115625 800 x 533 pixel

சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு காணப்பட்டனர்.

campus 7

தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தித் தருமாறு கோரி  தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  பல்கலைக்கழக ஒலுவில் வளாக பிரதான வீதிக்கு அருகில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு  பின்னர்   வளாகத்தினுள் ஊர்வலமாக தீப்பந்தம் ஏந்தி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG 20241213 115613 800 x 533 pixel

போலித் தீர்வுகள் வேண்டாம், விடுதி வசதிகளை விரிவுபடுத்து ,தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்தினுள் உடனடியாக  அழைக்கவும் , மாணவர்களை துன்புறுத்தாதே, மணவர்கள் மீதான அடக்கமுறை நிறுத்து,  போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி