(எச்.எம்.எம்.பர்ஸான்)
வாழைச்சேனை ஆயிஷா
மகளிர் மகா வித்தியாலயத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விஜயம் ஒன்றை வியாழக்கிழமை (12) மேற்கொண்டிருந்தார்.
பாடசாலைக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்விடம் பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் பௌதீக வள தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு வேண்டி கோரிக்கை கடிதமொன்றை கையளித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கல்குடா தொகுதி அமைப்பாளருமான சட்டத்தரணி ஹபீப் றிபான், ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.